சப்பாத்திக்கள்ளியின் மருத்துவ குணங்கள் :-
ஒபன்சியா டிலேனி என்ற தாவரவியல் பெயர் கொண்ட கேக்டேசியே குடும்பத்தைச் சார்ந்த சப்பாத்திக்கள்ளியின் தண்டுகளே இலைகளாக மாற்றுரு கொண்டுள்ளன.
இதன் இலைகளில் ஏராளமான அளவு நீர்ச்சத்தும், ஆர்பினோகேலக்டன், குர்சிட்டின் மற்றும் பிளேவனால்கள் போன்ற வேதிச்சத்துக்களும் காணப்படுகின்றன. இவை கிருமிகளை அழித்து ரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை.
முட்களுள்ள சப்பாத்திக்கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி, கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும். புண் ஆற தாமதமானால் மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.
சப்பாத்திக்கள்ளி பழத்தில் உள்ள சத்துக்கள் :-
1) 1.09 gms ப்ரோட்டீனும்
2) 61 கலோரியும்
3) 5.4 gms டயட்ரி பைபரும்
மினரல்சை பொறுத்தவரை
1) 328 mg பொட்டாசியமும்
2) 83 mg கால்சியமும்
3) 36 mg பாஸ்பரசும்
4) 127 mg மெக்னிசியுமும்
5) 0.45 mg அயனும்
6) 7 mg சோடியமும்
7) 0.119 mg காப்பரும்
0.18 mg சின்கும்
9) 0.9 mg செள்ளநீயம்
இவையின்றி இன்னும் சிற்சில மினரல்ஸ்களும் உண்டு
வைட்டமின்களை பொறுத்தவரை
வைட்டமின் A -64 IU
வைட்டமின் C – 20.9 mg
வைட்டமின்- B1 தையாமின் (thiamine) – 0.021 mg
வைட்டமின் -B2 ரிபோப்லாவின் (riboflavin) -0.089 mg
நியாசின் (niacin) – 0.685 mg
போலேட் (folate) – 9 mcg
வைட்டமின் B6 - 0.089 mg
மேலும் சில வைட்டமின்கள் குறைந்த அளவில் உள்ளன.