Author Topic: 360 டிகிரியில் சுழலும் கட்டடம்  (Read 2605 times)

Offline kanmani

   

360 டிகிரியில் சுழலும் கட்டடம்


Suite-Vollard

 வித்தியாசமாக ஒரு கட்டடத்தைக் கட்டி, பிரேசில் நாட்டு நிறுவனம் ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. Suite Vollard என்ற அந்த நிறுவனம் 360 டிகிரியில் சுழலும் குடியிருப்பு கட்டடத்தைக் கட்டியுள்ளது. மொத்தம் 11 மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தின் ஓவ்வொரு மாடியும் 360 டிகிரியில் சுழலும் தன்மை கொண்டது. ஒரு சுற்று சுற்றுவதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. சுற்றும் வேகத்தை அந்தந்த மாடியில் வசிப்பவர்கள் கூட்டவோ, குறைக்கவோ முடியும். சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் குடியிருப்புவாசிகள் ரசிக்கும் வகையில் கட்டடத்தின் வெளிச்சுவரில் கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளது.

மாடிப்பகுதி ஒன்றின் விலை என்ன தெரியுமா? அதிகமில்லை, 300,000 அமெரிக்க டாலர்கள்.