தேவையான பொருட்கள்:
பப்பரை மாவு (kuttu atta/buckwheat flour) - 2 கப்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 2 (மசித்தது)
உப்பு - 1 டீஸ்பூன்
நெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் பப்பரை மாவைப் போட்டு, அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி பதத்திற்கு மென்மையாக பிசைந்து, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சிறு உருண்டைகளாக்கி, சப்பாத்தி போன்று தேய்த்து, வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், கல்லில் நெய்யைத் தடவி, பின் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, சப்பாத்திகளின் முன்னும் பின்னும் நெய் தடவி, வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான பப்பரை சப்பாத்தி ரெடி!!!