Author Topic: <<<<நினைவுகள்>>>>  (Read 1382 times)

Online MysteRy

<<<<நினைவுகள்>>>>
« on: September 02, 2013, 07:46:43 PM »
குருவி ரொட்டி...



இன்று பலவகை வகையான பிஸ்கெட்டுக்கள் வந்தாலும் நாம் சிறுவயதில் 5 பைசாவிற்கும், 10 பைசாவிற்கும் இந்த ரொட்டி வாங்கி இரண்டாக பகிந்து சாப்பிட்ட காலங்கள் பல... இன்று அன்று போல் கட்டில் கடையும் குறைந்துவிட்டது ஆனால் குருவி ரொட்டி எங்கியாவது கிடைத்துக்கொண்டு தான் இருக்கிறது.. நம்மைப்போல் நம் குழந்தைகளும் நிச்சயம் விரும்பி சாப்பிடுகின்றன குருவிரொட்டிகளை...
பால்ய நினைவுகளில் குருவி ரொட்டிக்கும் முக்கிய இடம் உண்டு என்பது மறுக்க இயலாத ஒன்று...

Online MysteRy

Re: <<<<நினைவுகள்>>>>
« Reply #1 on: September 02, 2013, 07:47:57 PM »


எத்தனை பேருக்கு இது ஆபத்பாந்தவனா இருந்திருக்கும்னு தெரியலை!ஆனா எனக்கு எங்க பக்கத்து தெருவுல இருந்த இந்த மாதிரி ஒரு 'அடிபைப்' தான் பள்ளிநாட்களில் ரொம்ப உதவிய நண்பன்,,,

கோவம்,சந்தோசம் எல்லாம் இதை அடிக்கிற ஸ்டைல் லயே தெரியும்,,,அம்மா,அப்பா காலைலயே வயலுக்கு போயிடுவாங்க,,எனக்கு ஸ்கூல் போறதுக்குள்ள 25 குடமாச்சும் டெய்லி அடிச்சு எங்க வீட்டு தொட்டியை ரொப்பனும்,,,பெரும்பாலும் கிராமத்து பசங்களுக்கு பள்ளிக்கு போறது முன்ன இந்த மாதிரி ஏதாச்சும் வீட்டுப்பாடம் இருக்கும்,,,காலைல நாலுமணிக்கு அடிபைப் பிஸி ஆகிடும்,,,மாடு இருக்க வீட்டுக்காரய்ங்கதான் அன்னைக்கு நாளா ஆரம்பிச்சு வைப்பாங்க,,,சைக்கிள் ல சாக்கு போட்டு ரெண்டு குடங்களை போட்டு தண்ணியடிக்கணும்,,,12 நடை அடிக்கிறதுக்குள்ள கிறுகிறுத்து போவேன்,,,,ஒரு நாளு கூட கிரவுண்டுக்கு போயி உடற்பயிற்சி லாம் செய்ஞ்சதில்லை இதான் எங்களுக்கு உடற்பயிற்ச்சி,பொழுதுப்போக்கு எல்லாம்  :)

Online MysteRy

Re: <<<<நினைவுகள்>>>>
« Reply #2 on: September 02, 2013, 08:00:37 PM »
இளைய தலைமுறைக்காவது இனி கிடைக்குமா ?



வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !

சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !

சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !

மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?

மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?

வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?

சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய்
சுருங்கிப் போகுமோ?

வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!

தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?

இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?

சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா

Online MysteRy

Re: <<<<நினைவுகள்>>>>
« Reply #3 on: September 02, 2013, 08:05:41 PM »
தேன் மிட்டாய்...



ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும் போது கட்டில் கடையில் நெற்றியில் பெரிய பொட்டும் காதில் லோலுக்கும் போட்ட பாட்டியிடம் 5 பைசாவிக்கும், பத்துபைசாவிற்கும் தேன் மிட்டாய் வாங்கித்தின்றதில் இருந்து இன்று வரை பிடிக்கிறது தேன் மிட்டாய்... ஒரிஜனல் தேன் உள்ளே இல்லை என்றாலும் அந்த மிட்டாயின் சுவை இன்னும் சுவைக்கதோன்றுகிறது...

தேன் மிட்டாயை பாக்கெட்டில் ஒளித்து வைத்து தின்னபோது டவுசரில் எறும்பி ஏறி கடிச்ச கதை எல்லாம் நிறைய பேருக்கும் போல எனக்கும் உண்டு...

எத்தனை வருடம் ஆனாலும் தேன் மிட்டாயை நினைத்தால் இன்றும் எச்சில் ஊறுது..

Online MysteRy

Re: <<<<நினைவுகள்>>>>
« Reply #4 on: September 02, 2013, 08:08:44 PM »


" இலந்தப் பழம் செக்க சிவந்த பழம் தேனாட்டம் இனிக்கும் பழம் " இந்த பாடலை முனு முனுப்பது போல் இந்த பழத்தை சாப்பிடாதவர்கள் இருப்பது மிக கடினம்...

பள்ளியில் படிக்கும் போது 25 பைசாவிற்கு ஒரு உழுக்கு என்ற கணக்கில் வாங்கி டவுசர் பாக்கெட்டில் போட்டும் ஒவ்வொன்றாக திண்பதும், பொண்ணுங்க எல்லாம் ஜாமண்ரி பாக்சில் வைத்து ஒவ்வொன்றாக சுவைப்பதும் நடந்த அனைவரும் ரசித்து ரசித்து சாப்பிட்ட விசயம்...

பழம் மட்டுமல்லாமல் இலந்த வடை, இலந்த தூள் என் ஒவ்வொன்றாக திங்காதவர்கள் இருக்க இயலாது..அதுவும் இலந்த தூளை கையில் கொட்டி நக்கி தின்பதற்கு ஈடு இணை உண்டா... இன்றும் தேடி தேடி சாப்பிடுபவர்கள் நிறைய நிச்சயம் இருப்பர் இலந்தபழத்தையும், வடை மற்றும் இலந்த தூளையும்...

நாம் தவறவிட்ட விசயங்களில் இலந்தைக்கும் நிச்சயம் இடம் உண்டு...

Online MysteRy

Re: <<<<நினைவுகள்>>>>
« Reply #5 on: September 02, 2013, 08:10:56 PM »
பம்.. பம்.. பம்.. பம்பரம்!



வேகம், விவேகம், சிக்கலான நேரத்தில் சவாலைச் சமாளிக்கும் திறமை, அத்துடன் ரொம்ப ஜாலியாகப் பொழுதுபோக்குவதற்கான ஒரு விளையாட்டு... பம்பரம்.

பம்பரம் எத்தனை பேர் வேண்டுமானாலும் விளையாடலாம். விளையாட்டைத் தொடங்கும் முன், ஓர் அடி சுற்றளவுகொண்ட வட்டத்தைப் போட வேண்டும். அதன் நடுவில் மாங்கொட்டை அல்லது மரக்குச்சியை வைத்து, பம்பரத்தால் குறிவைத்துக் குத்த வேண்டும்.

வட்டத்துக்குள் இருக்கும் பொருள் வெளியேறும் வரை அனைவரும் குத்திக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி குத்தும்போது, கோட்டுக்கு வெளியே பம்பரக் குத்து விழுந்தால், அவரது பம்பரக் கட்டையை வட்டத்துக்குள் வைக்க வேண்டும்; அதை அனைவரும் குத்தி வெளியேற்றுவார்கள்.

ஒருவேளை கோட்டுக்கு உள்ளே இருக்கும் பொருளை யாராவது குத்தி வெளியேற்றிவிட்டால், அனைவரும் பம்பரத்தைத் தரையில் சுற்றவிட்டு, சாட்டையால் பம்பரத்தைச் சுண்டித் தூக்கி கையால் பிடிக்க வேண்டும். இதற்கு 'அப்பீட்’ என்பார்கள்.

அப்போது, யார் அப்பீட் எடுக்க வில்லையோ... அவர் தனது பம்பரத்தைக் கோட்டுக்குள் வைக்க வேண்டும். நண்பர்கள் வட்டம் பெருக பெருக இந்த விளையாட்டில் சுவாரஸ்யம் அதிகரித்து கொண்டே இருக்கும்!

உங்களில் எத்தனை பேர் அப்பீட் எடுத்திருக்கிறீர்கள்? வாங்க... உங்க அனுபவத்தையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்!

Online MysteRy

Re: <<<<நினைவுகள்>>>>
« Reply #6 on: September 02, 2013, 08:15:33 PM »
காளானைத் தேடி பயணித்துள்ளீர்களா?



மழை வெளுத்து வாங்கிய இரவின் விடியலில் காளானைத் தேடி பயணித்துள்ளீர்களா? காடு காடாக, வரப்பு வரப்பாக. எங்கள் ஊரில் இருக்கும் போது அப்படியான பல விடியல்கள் வரப்புகளில்தான் விடியும் எனக்கு. காளானைத் தேடும் பயணமென்பது கிட்டத்தட்ட ரகசியமானது எனக்கு. யாரிடமும் சொல்லக்கூடாதென்பதல்ல. யாரும் கேட்கத் தயாரில்லை எனும்போது யாரிடம் சொல்ல? அப்படியே கேட்டாலும் 'தேடிப்போனா காளானும் கல்லாப்போயிடும்'னு சொல்லும் ஊரில் எப்படி சொல்ல? ரகசியமாகவே தேங்கிவிட்டது.
காளானை தேடிச் செல்லும் தூரம் பெரும்பாலும் சில மைல்களுக்குள்ளேயே முடிந்துவிடும். மிக அரிதாக பல மைல்கள் கடந்து பக்கத்து ஊர்களின் எல்லைகளை சர்வ சாதாரணமாக தொட்டுவிடுவதும் உண்டு. தேடுபொருள் தவிர்த்து காலத்தையோ தொலைவையோ நாம் பொருட்படுத்துவதில்லை தேடலோடு கூடிய பயணங்களில். தேடலுக்கான பயணங்கள் இலக்கற்றது.
முன்பெல்லாம் எங்கள் குப்பை மேட்டில் (குப்பை மேடு என்றால் பெருநகரிலுள்ள பாலித்தீன் பைகளும், நாற்றமெடுத்த, அழுகிய உணவுப் பொருட்களும் நிரம்பிய முரட்டுக் குப்பை மேடுகளல்ல. ஆட்டுப்புழுக்கைகளும், மாட்டுச்சாணமும், சாம்பலும், வைக்கோலும் கள்ளக்கொடிகளும், தக்காளிச்செடிகளும் நிறைந்த மணக்கும் குப்பைக் குழி) காளான்கள் குடை விரித்து கிடக்கும். வேரோடு பிடுங்கி வருவேன். பிடுங்கிய கணமே வதக்கிய (சமைத்த) காளானின் சுவை நாவில் தொற்றி தொண்டை வரை படர்ந்து விடும் பாசியைப்போல. காளானை வதக்கும் போது வரும் மணம் இருக்கே... திடீர் பெருந்தூத்தலின் மண்வாசனையே சிறுத்துப் போகும். காளான் மேல் கொண்ட காதலின் பெரும்பகுதி அந்த மணம். காளானோடு வதங்கிய சின்ன வெங்காயமும், பட்ட மிளகாயும், வெடித்த கடுகும் அந்த மணத்தை மணந்துகொள்ளும்.
வரகரிசி காளான் தெரியுமா உங்களுக்கு? வரகு அரசி போல, மணல் மலராகி மலர்ந்தது போலவோ, மலர் மணலாகி உருண்டது போலவோ இருக்கும். எங்கள் வீட்டு மண் சுவரோரமும்,
புளிய மரத்தடியிலும், கரையான் புற்றுகளிலும் பூத்துக்கிடக்கும் வரகரிசி காளான்கள். அடர்த்தியாக பஞ்சு வெளிவந்த குட்டித் தலையணை போல. அப்படியே மெலண்டி மேலாப்பல பூப்பறிப்பது போல பறித்து சேமிக்க வேண்டும். வரகரிசி காளான்களை பறிக்க மணிக்கணக்கில் கால் வலிக்க அமர்ந்ததெல்லாம் உண்டு. காளானின் சுவை ஒன்றே கடத்திக்கொண்டிருக்கும் அவ்வளவு மணித்துளிகளையும். மண்ணோடு பெயர்த்தெடுத்தவற்றை நீர் நிரப்பிய பாத்திரத்தில் போட்டு மண் நீக்கவும் அவ்வளவு காலமாகும். அரைப்படி அளவுக்கு பறித்த வரகரிசிக் காளானை வதக்கினால் ஒரே கைப்பிடியில் வாயில் போட்டுக்கொள்ளலாம். அவ்வளவுதான். அதுக்குத்தான் இவ்வளவு உழைப்பும். அந்த ஒரு பிடி வேறெதில் கிடைக்கும்? பூத்துக்கிடக்கும் வரிகரிசி காளான்களில் வேர்ப்பகுதியிலும் பக்கவாட்டிலும் சற்று கடினமான வெள்ளை பாசி போல படர்ந்து கிடக்கும் பூஞ்சை, மறுநாளோ பிறிதொரு வேளையோ மலர காத்திருக்கும். அவை சேதமடையாமல் கவனமாக பறிக்க வேண்டும். அந்த பூக்காத காளான்களின் நினைவு நாளும் இரவும் திரண்டு வந்துகொண்டே இருக்கும். விடிந்தவுடன் அதன் முகத்தில்தான் விழிப்பேன். மீண்டும் பூத்திருக்கும்.

முட்டை முட்டையாக பைகளில் அடைத்து இப்பெருநகரத்தில் விற்கும் காளான்களை சுவைத்ததில்லை இந்நாள் வரை. நிச்சையம் எங்கள் ஊர் குடைக் காளானின் சுவையையோ வரகரிசி காளானின் சுவையையோ இதனால் ஈடுகட்ட முடியாதென்பதை மட்டும் அறிவேன். அடுத்த வாரம் காளானைத் தேடும் மற்றொரு பயணத்தைத் திட்டமிட்டுள்ளோம் நானும் மழையும். இம்முறையும் யாருக்கும் சொல்லும் எண்ணமில்லை.

Online MysteRy

Re: <<<<நினைவுகள்>>>>
« Reply #7 on: September 02, 2013, 08:21:43 PM »


மழைக்கு பின் நிற்கும் குட்டைத்தண்ணீரில் மெல்லிய மழைச்சாரலில் எத்தனை முறை விட்டு இருப்போம் இந்த காகித கப்பலை.... கால ஓட்டத்தில் நாம் மாறினாலும் இன்றும் நமது இளைய தலைமுறைகள் மழைக்குபின் விடும் காகித கப்பலை பார்க்கும் போது நினைவலைகளில் மூழ்குகிறோம்...

இதில் கத்தி கப்பல் என்று ஒன்று செய்து அதையும் போட்டிக்கு விடுவது.. சுகமான அனுபவம்...

நிச்சயம் நம்மில் காகிதக்கப்பலை நின் விட்டதில்லை என்று சொல்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்... அத்தனை பேரும் ரசித்திருப்போம் அன்று இனிய தொரு அனுபவத்தை.

Online MysteRy

Re: <<<<நினைவுகள்>>>>
« Reply #8 on: September 02, 2013, 08:42:53 PM »


விழுதுகளை பிடித்து
விளையாடும் மகிழ்ச்சி ,,,
விடலை பருவத்தில் .
விருப்பமானதாக இருந்தது ..
விலை மதிக்க முடியாத காலம்
விருட்சமான நட்பாக நிற்கிறது ...

Online MysteRy

Re: <<<<நினைவுகள்>>>>
« Reply #9 on: September 02, 2013, 08:45:08 PM »


தேன் மிட்டாய் – கால்ரூபாய்
கமர் கட் – 10 பைசா
இளந்த வடை – 10 பைசா
முறுக்கு – 5 பைசா

எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது ........சிறு வயதில் பள்ளிகூட விடுமுறை நாள்களில் வீட்டுக்கு அருகில் இந்த மாதிரி கடை அல்லது மோர் கடை / கரும்பு கடை அமைத்து சந்தோசமாக விடுமுறை களித்திருப்போம் ...

Online MysteRy

Re: <<<<நினைவுகள்>>>>
« Reply #10 on: September 02, 2013, 09:28:42 PM »
பல்லாங்குழி.



மழைக்கால விளையாட்டு என்றாலும் மதிய வெயில் நேரத்திலும்,பாட்டிக்கு கூட விளையாடவும் சிறந்த விளையாட்டு..நான் கள்ளாட்டம் ஆடுவதை பாட்டி சரியாக கண்டுபிடிதுவிடுவாள்..நாமெல்லாம் அப்பவே இப்படி..

சோழிகள் ரொம்ப ஸ்பெஷல் உள்ளே பத்திரமாய் இருக்கும்..நாங்கள் தொலைத்துவிட்டு கடைசியில் புளியங்கொட்டையே கதி..கோடை காலங்களில் புளியங்கொட்டை குத்தி எடுப்பார்கள்..ஆள் வைக்காமல் பாட்டிகளே செய்வார்கள்..அடுப்பிலிருந்து ..கீற்று கீறி விளக்குமாறு செய்வது வரை ஒவ்வொரு வீடும் தன்னிறைவு பெற்றிருந்த காலம்..இப்போது மேட் இன் சைனா விளக்குமாறுதான் நல்லா கூட்டுது.

புளியங்கொட்டை பாக்டரியில் போய் பொறுக்குவோம்.முதலில் ஒரு மரக்கா இல்ல படி அள்ளி கொண்டு வச்சு பொறுக்கணும் ..பெரிசா ஒரே அளவாய் ..இன்னொரு செட்டுக்கு சிறுசா ஒரே அளவாய் எடுத்துக்கணும்.வீட்டின் திண்ணையோ ,முற்றம்,இல்லை பின்பக்கம் எல்லாம் சின்ன பாக்டரிதான்..

பல்லாங்குழி பலகை நிறைய டிசைன்களில் வரும்..ஒரு வீட்டில் பல்லாங்குழிகள் தரையிலையே பண்ணி வைத்திருந்தனர்,வழ,வழவென்று..

ரூல்ஸ் வைத்து சோழிகளை ஒண்ணு ஒண்ணா போட்டு விளையாடணும்..சந்தேகம் உள்ளவர்களுக்கு லிங்க் கொடுத்துள்ளேன்..சோழி கணக்கு பாட்டி போடுவதை அடிச்சுக்க ஆள் இல்லை..கையில் எடுக்கும்போதே க்ளைமாக்ஸ் சொல்லிவிடுவாள்..இப்பெல்லாம் கால்குலேட்டர் மயம்..கணக்கு போட கத்துக்க விளையாட்டு வழி கல்வியில் பல்லாங்குழியை சேர்க்கணும்..நம் பண்டைய விளையாட்டையும் காப்பாத்தின புண்ணியம் வரும்.

விளையாடும் முறைகளுக்கு..குழைந்தைகளுக்கு அறிமுகபடுத்த வேண்டுகிறேன்..