Author Topic: பனானா பேன் கேக்  (Read 402 times)

Offline kanmani

பனானா பேன் கேக்
« on: September 03, 2013, 11:57:58 PM »


    பழுத்த வாழைப்பழம் - ஒன்று
    மைதா - கால் கிலோ
    சீனி - 5 தேக்கரண்டி
    முட்டை - ஒன்று
    பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
    பட்டர் - தேவையான அளவு
    உப்பு - ஒரு சிட்டிகை

 

 
   

மைதாவுடன் சீனி, உப்பு, பேக்கிங் பவுடர், முட்டை ஆகியவற்றைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும். அதனுடன் நன்றாக மசித்த வாழைப்பழத்தைச் சேர்த்து கலக்கவும். (இந்த மாவுக் கலவை நீர்க்க இல்லாமல் சற்று கெட்டியான பதத்தில் இருக்கவேண்டும்).
   

ஒரு பேனில் சிறிது பட்டர் போட்டு ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். (தோசை போல் வளர்த்த வேண்டாம்). இதேபோல் ஒவ்வொரு கரண்டி மாவாக எடுத்து 2 அல்லது 3 ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்து வேகவிடவும்.
   

ஒரு பக்கம் சிவந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு, அடிப்பகுதிக்கு சிறிது பட்டர் போட்டு வேகவிடவும். அடிப்பகுதியும் சிவந்ததும் எடுத்துவிடவும்.
   

குழந்தைகளுக்கு மாலை நேர டிஃபனாகக் கொடுப்பதற்கு டேஸ்டி பனானா பேன் கேக் (Banana Pan Cake) ரெடி. குழந்தைகளுக்கென்பதால் சிறிய கேக்குகளாக செய்துள்ளேன். விரும்பினால் சற்று பெரியதாகவும் செய்யலாம். நன்றாக பழுத்த வாழைப்பழத்தை வீணாக்காமல் இவ்வாறு செய்து ருசிக்கலாம்.