Author Topic: கானகத்து நதிகளிலே......  (Read 411 times)

Arul

  • Guest
கானகத்து நதிகளிலே......
« on: August 25, 2013, 05:13:57 PM »
அழகான கானகத்தில்
அன்பான ஆயிரம் பேர்
உள்ளத்தில் உண்மை அன்பு
உணவுகளும் அமுதுகளாய்
உண்ணத் தான் முடியவில்லை
உள்ளமெலாம் உன் நினைவு

தொடர்புகொள்ள வழி தேடி
கானகத்துள் அலைகின்றேன்
தொடர்பு கொள்ள வழியுமில்லை
தொடர்ந்து போகும் வழியுமில்லை

தொல்லை தான் படுகிறேனோ
உன்னையும் தொல்லை தான் கொடுத்தேனோ
உள்ளமெங்கும் போராட்டம்

என்றென்றும் உன்னை விட்டு
அமைதியாய் தொலைகின்றேன்
கானகத்து நதிகளோடு
உன் நினைவுகள் மிஞ்சியிருக்கும்

என்றேனும் நினைத்தாயோ
நினைவுகளால் நானும் வர
நினைவுகளும் அழித்துவிடு
நிம்மதியாய் நீயிருப்பாய்

காணாமல் கரைகின்றேன் கானகத்து நதிகளிலே..............








« Last Edit: August 25, 2013, 06:15:50 PM by அருள் »

Offline kanmani

Re: கானகத்து நதிகளிலே......
« Reply #1 on: August 26, 2013, 10:41:24 PM »
உண்ணத் தான் முடியவில்லை
உள்ளமெலாம் உன் நினைவு


nala azhagana arthamula unmaiyana varigal nala anubavichi eluthareenga arul