Author Topic: கீரை சூப்  (Read 428 times)

Offline kanmani

கீரை சூப்
« on: August 27, 2013, 11:18:21 PM »
தேவையான பொருட்கள்:

முளைக்கீரை - ஒரு கட்டு

சின்ன வெங்காயம் - 10

பச்சை மிளகாய் - 2

தண்ணீர் - 1/2 கப்

உப்பு - மிகக்குறைந்த அளவு

செய்முறை:

கீரையை ஆய்ந்து கழுவி அரிந்து கொள்ள வேண்டும். அதில் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதித்ததும் தீயைக் குறைத்து கீரை வேகும் வரை வைத்திருந்து இறக்க வேண்டும். பின் உப்பு லேசாக தூவி பரிமாற வேண்டும்.