பாலக் கீரை - ஒரு கட்டு
கொள்ளு - ஒரு கைப்பிடி
நறுக்கிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - சிறிதளவு
சீரகம் - சிறிதளவு
வரமிளகாய் - 2
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கீரையை நன்கு சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொள்ளை ஊற வைக்கவும்.
கீரையுடன் ஊற வைத்த கொள்ளு, பாதி வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சீரகத் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும். (கொள்ளு வெந்துவிட்டதா எனப் பார்த்துக் கொள்ளவும்).
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வரமிளகாய், மீதியுள்ள வெங்காயம் சேர்த்து தாளித்து கீரை கலவையில் சேர்க்கவும். பிறகு தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் வற்றும் வரை பிரட்டி அடுப்பிலிருந்து இறக்கவும்.
அதிகமாக இரும்பு சத்து நிறைந்த கொள்ளு கீரை கூட்டு தயார்.