Author Topic: க்ரீன் கட்லெட்  (Read 632 times)

Offline kanmani

க்ரீன் கட்லெட்
« on: August 26, 2013, 10:28:23 PM »
என்னென்ன தேவை?

உருளைக்கிழங்கு - அரை கிலோ,
டெல்லி பசலை (பாலக்) அல்லது முளைக்கீரை - 1 கட்டு,
வெங்காயம் - 1 (பெரியது),
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு பல் - 4,
பச்சை மிளகாய் - 4,
மல்லித் தழை - 1 கைப்பிடி,
எலுமிச்சைச் சாறு சிறிது, 
மைதா - அரை கப்,
பிரெட் தூள் - அரை கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப.
கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்,
முந்திரி - சிறிது.
எப்படிச் செய்வது? 

உருளைக்கிழங்கை நன்கு கழுவி வேக வைத்து, தோலுரித்து மசித்துக் கொள்ளவும். கீரையைக் கழுவி பொடியாக நறுக்கவும். இஞ்சி, பச்சை மிளகாய்,  பூண்டு, வெங்காயம், மல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். சிறிது எண்ணெய் காயவைத்து நறுக்கியவற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். பிறகு  கீரையை சேர்த்து வதக்கி, மசித்த கிழங்கு, உப்பு, கரம் மசாலா, எலுமிச்சைச்சாறு சேர்த்து இறக்கி, ஆறியதும் தேவையான வடிவத்தில் கட்லெட்  செய்யுங்கள். மைதா மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்து அதில் கட்லெட்டுகளை நனைத்து எடுத்து பிரெட் தூளில் நன்கு புரட்டி எடுத்து, காயும்  எண்ணெயில் 2, 3 ஆகப் போட்டு பொரித்தெடுக்கவும். அதன்மேல் முந்திரி கொண்டு அலங்கரித்து பரிமாறவும். சாஸுடன் சேர்த்தும் பரிமாறலாம்