என்னென்ன தேவை?
தக்காளி - 2,
ஆப்பிள் - 2,
உலர்ந்த திராட்சை - 20,
பிரவுன் சுகர் (சமையலுக்கானது) - அரை கப்,
சிறிது எலுமிச்சைச் சாறு - 1,
உப்பு - ஒரு சிட்டிகை.
மசாலா பை செய்ய...
வெள்ளைத் துணியில் 2 கிராம்பு,
அரை இஞ்ச் பட்டை,
2 ஏலக்காய், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்,
கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து மூட்டையாகக் கட்டி வைக்கவும்.
எப்படிச் செய்வது?
ஆப்பிள், தக்காளி இரண்டையும் தோல் நீக்கி அரைத்து வடித்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் போட்டு இத்துடன் திராட்சை, பிரவுன் சுகர், மசாலா மூட்டை போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வேக விடவும். இது சட்னி பதத்திற்கு வந்தவுடன் இறக்கி மசாலாப் பையை எடுத்து விட்டு பரிமாறவும்.
குறிப்பு: கை படாமலிருந்தால் இது 10 நாட்கள் வரை கெடா மலிருக்கும். பிரெட், சப்பாத்தி, பரோட்டா, பிரியாணி, தோசை ஆகியவற்றுக்கு சைட் டிஷ்.