உன்னோடு பேசிய ஒவ்வொரு வார்தைகளும்
என் மனதில் கல்வெட்டுக்களாய் பதிந்து போனதடி,
உனக்கு தான் உண்மை பேசுவதில் ஏனோ தடுமாற்றம்
என்னிடம் மறைத்து பேசுவதில் உனக்கு ஆனந்தம்
ஏங்கிதான் போகிறேனடி உன்னிடம் இருந்து வரும்
அன்பு வார்த்தைகளுக்கு..
உன் மனதில் உள்ளதை கேட்க நான் தவம் கிடக்கிறேனடி
நீயோ தவணை முறையில் சொல்லி என்னை கொல்கிறாயடி
என் மனதை சந்தோசப் படுத்த தயக்கம் தான் உனக்கு ஏனடி
என்னோடு இருக்கும் சில நிமிடங்ளில் கண்களால் பேசிவிட்டு
நீ பறந்து செல்கிறாய் நான் உயிரை உன்னோடு அனுப்பிவிட்டு
இங்கு பிணமாய் அலைந்து செல்கிறேன் ...............
உன் நினைவுகளை மட்டும் வைத்துக் கொண்டு........