புளியங்காய் - 5
பச்சைமிளகாய் - 7
நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
புளியங்காயின் மேல்தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும்.
பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கி வைக்கவும்.
புளியங்காய், பச்சைமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக அரைக்கவும்.
புளிசாதம், எலுமிச்சை சாதம், போன்றவற்றுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.