கோவைக்காய் - கால் கிலோ
வெங்காயம் - ஒன்று
பூண்டு - இரண்டு பற்கள்
மிளகாய்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஆறு எண்ணிக்கை
சோம்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய்ப்பூ - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கோவைக்காயை நன்கு கழுவிக்கொண்டு மெல்லிய வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.
சட்டியில் எண்ணெயை காயவைத்து கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை போட்டு பொரிந்தவுடன் நசுக்கிய பூண்டு, வெங்காயத்தை போட்டு வறுக்கவும்.
பிறகு நறுக்கி வைத்துள்ள காய்களை போட்டு அதை தொடர்ந்து உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூளை போட்டு நன்கு கிளறவும். காய்கள் நன்கு சுருள வெந்ததும் தேங்காய்ப்பூவை தூவி விட்டு இறக்கிவிடவும்.