Author Topic: நூல்கோல் கிரேவி  (Read 446 times)

Offline kanmani

நூல்கோல் கிரேவி
« on: August 24, 2013, 01:49:53 PM »

    நூல் கோல் - ஒன்று
    வெங்காயம் - ஒன்று
    தக்காளி - ஒன்று
    பூண்டு - 3 அல்லது 4 பல்
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு
    மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
    மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
    தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    சோம்பு - 2 தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு ஏற்ப
    எண்ணெய் - தேவைக்கு ஏற்ப

 

 
   

வெங்காயம் மற்றும் தக்காளியை சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும்.
   

நூல்கோலை தோல் சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
   

குக்கரில் நறுக்கிய நூல்கோலுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
   

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
   

இஞ்சி - பூண்டு சிறிது வதங்கியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
   

வதங்கிய பொருட்களை ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். இப்போது அதே கடாயில் அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.
   

குக்கரில் வேக வைத்துள்ள நூல்கோலை அந்த நீருடன், கடாயில் சேர்க்கவும்.
   

சிறிது நேரத்தில் நூல்கோலும் அரைத்த விழுதும் ஒன்றாக கலந்து நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும். இப்போது தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் மிளகு தூள் சேர்த்து அடுப்பை நிறுத்தி விடவும்.
   

நூல்கோல் கிரேவி தயார். இது சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். தோசையுடனும் சாப்பிடலாம்.