Author Topic: ஈசி கடலை குருமா  (Read 1045 times)

Offline kanmani

ஈசி கடலை குருமா
« on: August 12, 2013, 10:35:19 PM »

    கொண்டைக்கடலை - ஒரு கப்
    வெங்காயம் - 2
    தக்காளி - ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி, பூண்டு விழுது - ஒன்றரை தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    கொத்தமல்லித் தழை
    மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
    பிரியாணி மசாலா - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    அரைக்க:
    தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி
    வேகவைத்த கொண்டைக்கடலை - 10
    முந்திரி - 3
    தாளிக்க:
    எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
    சோம்பு - அரை தேக்கரண்டி
    பட்டை - ஒரு துண்டு
    கிராம்பு - 2

 

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். கொண்டைக்கடலையை ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவைத்து தண்ணீருடன் எடுத்து வைக்கவும். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைக்கவும்.
   

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிக்க வேண்டியவற்றை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
   

பிறகு இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும்.
   

தக்காளி குழைய வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
   

வதங்கியதும் தூள் வகைகள், உப்பு சேர்த்து வதக்கவும்.
   

அதனுடன் கொண்டைக்கடலையை தண்ணீருடன் சேர்த்து சிறிது நேரம் வேகவிட்டு கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
   

டேஸ்டி & ஈசி கடலை குருமா தயார். சப்பாத்தி, பூரி, பரோட்டா ஆகியவற்றிற்கு ஏற்ற ஜோடி.