Author Topic: ~ எலுமிச்சையைக் கொண்டு சுத்தப்படுத்த ~  (Read 1247 times)

Online MysteRy

எலுமிச்சையைக் கொண்டு சுத்தப்படுத்த

எலுமிச்சை பழத்தை நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தாமல் இருப்பதில்லை. சமையலுக்கு மட்டுமில்லாமல் அதை உப்பு அல்லது சர்க்கரை கலந்து பானமாகவும் குடித்தால் வெயிலுக்கு உற்சாகமாக இருக்கும். மேலும் நமக்கு அது தெம்பூட்டி புத்துணர்ச்சியையும் தரும். செரிமானத்திற்கும் கூட மிகவும் நல்லது.

இப்படிப்பட்ட எலுமிச்சை பல மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நம் உடல் நலத்தை காக்க பல விதத்தில் உதவும். இதையெல்லாம் மீறி அதற்கு இன்னொரு குணமும் உண்டு. இது ஒரு சிறந்த சுத்தகரிப்பானாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உண்மை தான்.

பல வகையில் திறமை வாய்ந்த எலுமிச்சையை அழுக்குப் படிந்த பொருட்களை சுத்தப்படுத்த எப்படி உபயோகிக்கலாம்? சிட்ரிக் அமிலம் அதிகமுள்ள எலுமிச்சை சாறு பாக்டீரியாவை அழிக்கவும் மற்றும் குறைந்த அமிலக்காரக் குறியீடு இருப்பதால் இது ஒரு இயற்கை சுத்தகரிப்பானாக உள்ளது. நல்ல வாசனையுடன் விளங்கும் எலுமிச்சையை, துணிகள் அல்லது மர வகை பொருட்களின் மீது பயன்படுத்துவதால் அவைகள் பாதுகாப்பாக இருக்கும். இப்போது இந்த எலுமிச்சையைப் பயன்படுத்தி எந்த பொருட்களையெல்லாம் சுத்தப்படுத்தலாம் என்று பார்ப்போமா!!!



கொத்தும் பலகை



பொதுவாக காய்கறி, பழங்கள் அல்லது கறிகளை வெட்டப் பயன்படுத்தும் பலகை காலப்போக்கில் அழுக்குப் படிந்து, நிறம் மாறி போய்விடும். நிபுணர்களின் ஆய்வின்படி, நிறம் மாறி, அழுக்குப் படிந்த கொத்தும் பலகையை எலுமிச்சை சாற்றை வைத்து கழுவினால், மறுபடியும் அதன் பழைய நிறம் வந்து சேரும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Online MysteRy

பித்தளை



ஒரு எலுமிச்சையை இரண்டாக அறுத்து, அதில் உப்பை தூவி, பித்தளை மற்றும் செப்புப் பாத்திரங்கள் மீது தேய்த்தால், இது பாத்திரங்களை மறுபடியும் மின்ன வைக்கும்.

Online MysteRy

துரு


 
எலுமிச்சை சாற்றில் சிறு உப்பை கலந்து, துருப்பிடித்த இடங்களில் நன்கு தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் தண்ணீரில் நன்கு கழுவி விட வேண்டும். துருவின் கடுமையை பொறுத்து இதை திரும்ப திரும்ப செய்ய வேண்டும்.

Online MysteRy

காய்கறி மற்றும் பழங்கள்



உணவுகளில் நச்சு ஏற்படாமல் தடுக்க எலுமிச்சசை பழங்கள் உதவி புரிகிறது. கொலராடோ மாநில பல்கலைகழகத்தின் ஆய்வின்படி, ஈகோலை எனப்படும் ஒருவகை நுண்கிருமியில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை எலுமிச்சை பானத்தில் முதலில் கழுவி விட்டு பின்னர் தண்ணீரில் இரண்டு முறை கழுவ வேண்டும் என்று சொல்கிறது.

Online MysteRy

ஜன்னல்கள்



ஆம், ஜன்னல்களை துடைக்க எலுமிச்சை சாறு பயன்படும். அரை கப் வெள்ளை வினீகரை, சிறிது தண்ணீரில் கலக்கவும். அதனுடன் கொஞ்சம் எலுமிச்சை பானத்தை கலந்து கொள்ளவும். இந்த கலவையை பயன்படுத்தி, சமையல் அறையின் எண்ணெய் பசைப் படிந்த ஜன்னல்களை எளிதில் சுத்தம் செய்யலாம்.

Online MysteRy

கண்ணாடிக் கதவுகள்



சுவாரசியமான ஒன்று என்னவென்றால், இயற்கை சுத்தகரிப்பானாக இருக்கும் எலுமிச்சை பானம், கண்ணாடிக் கதவுகளை சுத்தப்படுத்தவும் செய்யும். சோப்பு நுரையை வைத்து கழுவும் போது கண்ணாடி மந்தமாக மாறுகிறதா? கவலையை விடுங்கள். ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டிக் கொண்டு, அதை நன்றாக கண்ணாடியின் மேல் துலக்கி விடுங்கள். நீர்த்த எலுமிச்சை பானத்தை ஒரு தெளிப்பான் பாட்டிலில் நிரப்பி, கண்ணாடி கதவின் மேல் தெளித்து விடுங்கள். கண்ணாடி மேல் உள்ள அந்த சாறு சிறிது நேரம் காயட்டும். அரை மணி நேரம் கழித்து கண்ணாடியை நீரில் மறுபடியும் கழுவுங்கள். ஒரு நல்ல துணி அல்லது ஸ்பாஞ்சில் துடைத்தால் கண்ணாடி பளபளப்பாவது நிச்சயம்.

Online MysteRy

கழிவறை



எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடாவை பயன்படுத்தினால் நாம் துடைக்கும் வேலை சுலபமாகிவிடும். கழிவறை கோப்பைகளில் இந்த கலவையை தூவி விட்டால் போதும். தானாகவே சில இயற்கையான ரசாயன மாற்றங்கள் நடந்து, சிறிது நேரத்திற்கு பின் கோப்பையினுள் நன்கு துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்தால், கறை ஓடியே போகும்.

Online MysteRy

டப்பர்வேர்



பாத்திரங்கள் சிறிது பேக்கிங் சோடாவை கறைப் படிந்த டப்பர்வேர் பாத்திரங்களில் போட்டு, ஒரு அரை எலுமிச்சையை எடுத்து, அதன் உட்பக்கமும் வெளிப்பக்கமும் நன்கு சுரண்ட வேண்டும். இதனால் கறைகள் நீங்கி பழைய வெண்மையுடன் காட்சி அளிக்கும் டப்பர்வேர் பாத்திரங்கள்.

Online MysteRy

பர்னிச்சர்கள்



பர்னிச்சர்களை துடைக்க சரிசமமான அளவில் கலந்த தாவர எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை பயன்படுத்தலாம். தேசிய சூழ்நிலைக்கான சேவை மையத்தின் கூற்றுப்படி, 16 அவுன்ஸ் கனிம எண்ணெயுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும். நல்ல விளைவை பெற இந்த கலவையை ஒரு தெளிப்பான் பாட்டிலில் நிரப்பி, மர அறைகலன்களின் மேல் தெளித்து, பின் நன்கு துடைத்து எடுத்தால் பளபளப்பாக இருக்கும்.

Online MysteRy

அடுப்பு



பேக்கிங் சோடாவை எலுமிச்சை பானத்துடன் சேர்த்து ஒரு கலவையை தயார் செய்துக் கொண்டு, அதை அடுப்பின் மேல் உள்ள அழுக்கு மற்றும் கறை படிந்த இடங்களில் நன்கு தடவுங்கள். சுமார் 15 நிமிடம் அது ஊறட்டும். பின்னர் அந்த கலவையை துடைத்தெடுத்து, ஒரு ஈரத் துணியால் துடைத்தெடுக்கவும்.