புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது புற்றுநோய் பாதித்த திசுக்களை மட்டும் துல்லியமாக அகற்றும் ஒரு புதிய வகை கருவியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புற்றுநோய் தாக்கிய திசுக்களை முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது என்பது இன்றைய காலத்தில் இயலாத காரியமாகும்.
இதனால் புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்த போதிலும் மீண்டும் புற்றுநோய் தாக்கும் அபாயமும் இருந்து வந்தது. இதனையடுத்து புற்றுநோய் திசுக்களை சரிசெய்ய தற்போது கண்டுபிடித்துள்ள இந்த புதிய வகை கருவியால் புற்றுநோய் பாதித்த திசுக்களை மற்ற திசுக்களில் இருந்து பிரித்து காட்ட முடியும் அதனால் அவற்றை மிக துல்லியமாக நீக்கலாம். இதனால் புற்றுநோய் பாதித்து அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் தாக்கும் அபாயம் பலமடங்கு குறைந்துள்ளது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.