தேவையான பொருட்கள்:
மேகி - 1 பாக்கெட்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மேகி பொடி - 1 பாக்கெட்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 1/2 டம்ளர்
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு நன்கு 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து, 5 நிமிடம் வதக்க விட வேண்டும். பிறகு அதில் தண்ணீரை ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
தண்ணீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மிளகாய் தூள், மேகி பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு கொதி விட வேண்டும்.
பின்பு மேகியை உடைத்து அதில் சேர்த்து கிளறி விட்டு, தீயை குறைவில் வைத்து தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து இறக்கினால், சூப்பரான குடைமிளகாய் மேகி ரெடி!!!