பரோட்டா - 4
கீமா - 50 கிராம்
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கேரட் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
முட்டை - 2
கொத்தமல்லித் தழை - சிறிது
எலுமிச்சை சாறு - சிறிது
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
பரோட்டாக்களை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி வைக்கவும். கேரட்டை துருவிக் கொள்ளவும். கீமாவுடன் சிறிது இஞ்சி, பூண்டு விழுது, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதனுடன் தக்காளி, கேரட் சேர்த்து வதக்கவும். பிறகு கரம் மசாலா தூள், கொத்தமல்லித் தழை மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, வேக வைத்த கீமாவைச் சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
பின்பு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்.
கடைசியாக பரோட்டாவை சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான கொத்து பரோட்டா ரெடி.