என்னென்ன தேவை?
வரகரிசி - 100 கிராம்,
தேங்காய் பால் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் - 1 கப்,
துருவிய வெல்லம் - அரை கப்,
பாசிப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப,
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்,
நெய் அல்லது சூரியகாந்தி எண்ணெய் - அரை டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பாசிப்பருப்பை வெறும் கடாயில் சிவக்க வறுத்து, ஊற வைத்த அரிசியுடன் சேர்த்து, 3 கப் தண்ணீர் விட்டு, பிரஷர் குக் செய்யவும். வெந்ததும், அதை நன்கு மசித்து, வெல்லப் பாகு சேர்த்து ஒரு கொதி விடவும். பிறகு தேங்காய் பால் அல்லது சாதாரண பால் விட்டு, இறக்கி, ஏலக்காய் சேர்த்து, நெய் அல்லது எண்ணெயில் வறுத்த முந்திரி, திராட்சை தூவிப் பரிமாறவும்.