Author Topic: வாழைப்பழ இட்லி  (Read 657 times)

Offline kanmani

வாழைப்பழ இட்லி
« on: July 22, 2013, 11:30:08 PM »
தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
கனிந்த வாழைப்பழம் - 3-4 (மசித்தது)
உப்பு - 1 சிட்டிகை
வெல்லம் - 1/2 கப் (தேவைக்கேற்ப)
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மசித்த வாழைப்பழத்தைப் போட்டு, ரவை, துருவிய தேங்காய், உப்பு, வெல்லம் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி இட்லி பதத்திற்கு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லி தட்டில் நெய்யைத் தடவி, இநத் மாவை இட்லிகளாக ஊற்றி, பாத்திரத்தின் உள்ளே வைத்து, மூடி வைத்து 15 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான வாழைப்பழ இட்லி ரெடி!!!