என்னென்ன தேவை?
பாசிப்பருப்பு - 1/2 கிலோ,
சர்க்கரை - 1/2 கிலோ,
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்,
முந்திரி - 50 கிராம்,
திராட்சை - 50 கிராம்,
நெய் - 100 கிராம் மற்றும் வறுப்பதற்கு சிறிது.
எப்படிச் செய்வது?
பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையை தூளாக்கிக் கொள்ளவும். ஏலக்காய் தூள் தூவி மூன்றையும் நன்கு கலந்து கொள்ளவும். இத்துடன் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்துப் போட்டு கலக்கவும். கடாயில் நெய் ஊற்றி நன்றாக சூடாக்க வேண்டும். சூடானவுடன் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.