Author Topic: செட்டிநாட்டு வாழைக்காய் பொடிமாஸ்  (Read 497 times)

Offline kanmani

வாழைக்காய்        & 2 தோல் சீவி சிறு சதுரங்களாக நறுக்கவும்
பச்சை மிளகாய்        & 2 நீளமாக நறுக்கவும்
பெரிய வெங்காயம்    & 1
அல்லது
சின்ன வெங்காயம்    & 15 தோலுரித்து பொடியாக நறுக்கவும்.
தாளிக்க:
கடுகு            & ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு    & ஒரு ஸ்பூன்
வரமிளகாய்        & 2 பாதியாகக் கிள்ளியது
உப்பு             & தேவைக்கேற்ப
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுடவைத்து வாழைக்காயை உப்பு சேர்த்து வேக வைத்து பின்பு தண்ணீரை வடித்து விடவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி தாளிப்பவற்றைப் போட்டு தாளித்து வெங்காயம் பச்சை மிளகாயை வதக்கி அதில் வாழைக்காயைப்போட்டு சூடானதும் இறக்கி விடவும்.

சௌசௌ வாங்கும்போது தோலில் முள் இல்லாமல் வழுவழுப்பாக இருக்குமாறு வாங்கினால் காய் இளசாக இருக்கும்.