தேவையான பொருட்கள்:
குளிர்ந்த நீர் - 1 1/2 கப்
க்ரீன் டீ பேக் - 6
மாம்பழக் கூழ்/மாம்பழ நெக்டர் - 1 கப்
சர்க்கரை - தேவையான அளவு
புதினா இலை - சிறிது
மாம்பழ துண்டு - 1 (மெல்லியதாக சீவியது)
செய்முறை:
முதலில் நீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் க்ரீன் டீ பேக்கை போட்டு, 5 நிமிடம் ஊற வைத்து, அந்த பேக்குகளை எடுத்துவிட வேண்டும். பின் அதில் மாம்பழக் கூழ் மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்க வேண்டும். பின்பு அவற்றில் புதினாவைப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, மாம்பழத் துண்டுகளைப் போட்டு பரிமாறினால், சுவையான மாம்பழ டீ ரெடி!!!