Author Topic: உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி கட்லெட்  (Read 399 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 8-10 (வேக வைத்தது)
பச்சை பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
 பிரியாணி இலை - 1
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வேக வைத்த உருளைகிழங்கின் தோலை உரித்து, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் மற்றும் பச்சை பட்டாணி சேர்த்து, தீயை குறைவில் வைத்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கையும் சேர்த்து, மசாலா நன்கு உருளைக்கிழங்குடன் சேரம் வரை வதக்கி இறக்க வேண்டும்.

அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கு கலவையை கட்லெட் வடிவில் கைகளால் தட்டி, எண்ணெயில் போட்டு தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான உருளைக்கிழங்கு மற்றும் பட்டாணி கட்லெட் ரெடி!!!

இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.