Author Topic: மாமடிக்காய அன்னம்  (Read 450 times)

Offline kanmani

மாமடிக்காய அன்னம்
« on: July 18, 2013, 11:12:53 PM »
என்னென்ன தேவை?

அரிசி             - கால் கிலோ
மாங்காய்        -  கால் கிலோ
மஞ்சள்தூள்        - அரை டீஸ்பூன்
உளுந்து        - ஒன்றரை டீஸ்பூன்
கடுகு            - ஒன்றரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு        - ஒன்றரை டீஸ்பூன்
இஞ்சி            - 1 துண்டு
தனியா            - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்     - 4
பச்சைமிளகாய்        - 4
முந்திரி பருப்பு        - தேவையான அளவு
கறிவேப்பிலை,
கொத்தமல்லி        - சிறிதளவு
பெருங்காயம்         - 1 சிட்டிகை
உப்பு             - தேவையான அளவு
நல்லெண்ணெய்      - தேவையான அளவு.
எப்படிச் செய்வது?

மாங்காயை கேரட்சீவி மூலம் துருவிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயை இரண்டாக வகுந்து கொள்ளுங்கள். அரிசியை குழையாமல் சாதமாக்கிக் கொள்ளுங்கள். உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா, 2 காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ளுங்கள். இஞ்சியை சிறிது, சிறிதாக வெட்டிக்கொள்ளுங்கள். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, மீதமிருக்கும் காய்ந்த மிளகாயை கிள்ளிப்போட்டு தாளியுங்கள்.

இதில், துருவி வைத்துள்ள மாங்காய், இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயத்தைப் போட்டு வதக்குங்கள். நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், லேசாக உப்பு சேர்த்து கிளறி இறக்கி ஆற வையுங்கள்.  நன்கு ஆறியதும், இந்த கலவையில் சாதத்தை சிறிது, சிறிதாக சேர்த்து, அரைத்து வைத்துள்ள பருப்பு கலவை, தேவையான அளவு உப்பு, நல்லெண்ணெய் சேர்த்து கிளறி கொத்தமல்லி, முந்திரிப்பருப்பை தூவுங்கள். ஆந்திர பாரம்பரியம் மணக்கும் மாமடிக்காய அன்னம் தயார்.