Author Topic: காசி அல்வா  (Read 496 times)

Offline kanmani

காசி அல்வா
« on: July 17, 2013, 10:45:18 PM »

    பூசணி துருவல் - ஒரு கப்
    திக்கான பால் - ஒரு கப்
    சர்க்கரை - முக்கால் கப்
    கேசரி பவுடர் - 2 சிட்டிகை
    முந்திரி - 10
    ஏலக்காய் - 3
    நெய் - கால் கப்

 
   

பூசணி துருவலில் தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து வைக்கவும்.
   

குக்கரில் பூசணி துருவலுடன் பால் ஊற்றி நன்கு குழைய வேகவிடவும்.
   

வெந்ததும் நன்கு மசித்துக் கொள்ளவும். அல்லது ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். குக்கரில் மசித்த பூசணியை சேர்த்து வற்றும் வரை கிளறிவிடவும்.
   

பின் சர்க்கரை, கேசரி பவுடர் சேர்த்து கிளறவும்.
   

சர்க்கரை சேர்த்தும் கெட்டியாக இல்லாமல் தளர்ந்து வரும். தொடர்ந்து கிளறவும்.
   

கெட்டியாகும் வரை கிளறி, பொடித்த ஏலக்காய் மற்றும் நெய் சேர்த்து கிளறவும்.
   

நெய் பிரிந்து வரும் போது நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும்.
   

சுவையான, எளிமையான காசி அல்வா ரெடி.