Author Topic: முந்திரி கீர்  (Read 527 times)

Offline kanmani

முந்திரி கீர்
« on: July 10, 2013, 11:34:03 PM »
என்னென்ன தேவை?

முந்திரி பருப்பு- 3/4 கப்(சூடான நீரில் 34 மணி நேரம் ஊர வைக்கவும்)
மெல்லியதாக சீவிய பாதாம்-1தேக்கரண்டி
குங்குமப்பூ-1/4 தேக்கரண்டி(சூடான பாலில் ஊறவைக்கவும்)
சர்க்கரை-1/2 கப்
பால்-1 லிட்டர் 
ஏலக்காய் தூள்-  1/4 தேக்கரண்டி

எப்படி செய்வது

ஊறவைத்த முந்திரி பருப்பை சுத்தம் செய்து அரைத்துக்கொள்ள வேண்டும். பாலை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு குங்குமப்பூவை   பாலுடன் சேர்க்கவும்.. சிறிது நேரம் கழித்து பொடி செய்து வைத்துள்ள முந்திரி பருப்பை பாலுடன் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் ஏலக்காய்,   சர்க்கரையை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். பாதாமை இதன் மேல் தூவவும். அடுப்பிலிருந்து இறக்கி பாத்திரத்தில் ஊற்றவும். அதன்   மேல் முந்திரி துண்டுகளை போட்டு அலங்கரிக்கவும். சூடான முந்திரி கீர் தயார்.