மைதா மாவு - 170 கிராம் வெண்ணெய் - 120 கிராம் பொடித்த சர்க்கரை - 120 கிராம் முட்டை - 4 பாதாம் எசன்ஸ் - 6 துளிகள் துருவிய ஆரஞ்சு பழத்தோல் - அரை கரண்டி பாதாம் பருப்பு - 20 கிராம் பதப் படுத்தப்பட்ட ஆரஞ்சு தோல் - 50 கிராம் உலர்ந்த பழவகைகள்: விதை இல்லாத திராட்சை - 50 கிராம் விதையுள்ள திராட்சை - 50 கிராம் கறுப்புத் திராட்சை - 50 கிராம் செர்ரி பழம் - 50 கிராம் பல பழ வகைகள் கலந்தது - 50 கிராம் சமையல் சோடா - கால் தேக்கரண்டி பால் - ஒரு மேசைக்கரண்டி வாசனைத் தூள் - அரை தேக்கரண்டி
பழங்களில் உள்ள கொட்டைகளை நீக்கி சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். செர்ரி பழங்களையும் உலர்ந்த ஆரஞ்சு பழத் தோலையும் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2 மேசைக்கரண்டி மாவை அதில் தூவிக் கொள்ளவும். பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு தோலை நீக்கிவிடவும். பிறகு பருப்புகளை துடைத்து வைத்துக் கொள்ளவும். பருப்பை நடுவில் பிளந்து இரண்டு பாகங்களாகச் செய்து கொள்ளவும்.
ஆரஞ்சு பழத்தோலை கொப்பரைத் துருவியில் சீவி, மேல் தோலை அரை தேக்கரண்டி எடுத்துக் கொள்ளவும். வெண்ணை அல்லது மார்கரினையும், பொடித்த சர்க்கரையையும் சேர்த்து லேசாக ஆகும் வரை மரக்கரண்டியினால் குழைக்கவும். முட்டைகளை நன்றாக அடித்து எசன்ஸ் சேர்க்கவும். அடித்த முட்டையை குழைத்த கலவையில் சிறிது சிறிதாகச் சேர்த்து மரக்கரண்டியினால் அடிக்கவும். ஆரஞ்சு பழத்தோலையும் சேர்க்கவும்.
மாவை மசாலாப் பொடியுடன் சேர்த்து சலிக்கவும். பழ வகைகளையும், சலித்த மாவையும் குழைத்த கலவையில் சேர்க்கவும். சோடா உப்பைப் பாலில் கலந்து மாவுடன் சேர்த்து விரல் நுனிகளால் மெதுவாகக் கலக்கவும். 10 அங்குல கேக் பேக் செய்யும் தட்டில் நெய் தடவி மாவு தூவிக் கொள்ளவும். கலவையை தட்டில் போடவும். 350 டிகிரி தி சூட்டில் சுமார் ஒன்றரை மணிநேரம் பேக் செய்யவும். தோல் நீக்கின பாதாம் பருப்பை 2 துண்டுகளாக்கி கேக்கின் மேல் பாகத்தில் அழகாக வைக்கவும்.