தேவையான பொருட்கள்:
பீச் - 8-10
பால் - 1 கப்
வென்னிலா ஐஸ் க்ரீம் - 2 கப்
ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு
சாக்லெட் சாஸ் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பீச் பழத்தை நறுக்கி, மிக்ஸியில் போட்டு, 1/2 கப் பால் ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் வென்னிலா ஐஸ் க்ரீம் மற்றும் மீதமுள்ள பால் சேர்த்து, ஐஸ் கட்டிகளையும் சிறிது போட்டு, நன்கு மென்மையாகும் வரை அடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு டம்ளரில் சாக்லெட் சாஸ் சேர்த்து, அந்த டம்ளரை சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து, பின் அதனை வெளியே எடுத்து, அதில் அரைத்து வைத்துள்ள பீச் மில்க் ஷேக்கை ஊற்றி பரிமாறினால், சூப்பரான பீச் மில்க் ஷேக் ரெடி!!!