Author Topic: மசாலா சீயம்  (Read 456 times)

Offline kanmani

மசாலா சீயம்
« on: July 07, 2013, 11:35:32 PM »
என்னென்ன தேவை?

பச்சரிசி - 1 கப்,
உளுந்து - 1 கப்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
கடுகு, உளுந்து - தாளிக்க,
தேங்காய்த் துருவல் - 1/4 கப்,
உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிப்பதற்கு.

எப்படிச் செய்வது? 

பச்சரிசி, உளுந்தை சேர்த்து அரைத்து, அதில் வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கிப் போட்டு, கடுகு, உளுந்து தாளித்துச் சேர்க்கவும். தேங்காய்த் துருவலில், உப்பு போட்டு வதக்கி, மாவில் கொட்டிப் பிசைந்து, சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.