Author Topic: மின்ட் ஸ்குவாஹ்  (Read 537 times)

Offline kanmani

மின்ட் ஸ்குவாஹ்
« on: July 06, 2013, 11:09:57 PM »
என்னென்ன தேவை?
புதினா - அரை கட்டு,
சர்க்கரை - ஒன்றே கால் கப்,
தண்ணீர் - 1 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
பச்சை நிற ஃபுட் கலர் - சில துளிகள்,
சிட்ரிக் ஆசிட் - 1 டீஸ்பூன்,
இஞ்சி - 1 சிறு துண்டு.

எப்படிச் செய்வது?

இஞ்சியில் ஒரு டீஸ்பூன் தண்ணீர் விட்டு அரைக்கவும். தண்ணீரையும் சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் வைத்து அடுப்பில் ஏற்றிக் கரைய விடவும். கொப்புளங்கள் வரும் போது இறக்கி, வடிகட்டிய இஞ்சிச் சாற்றை அதில் சேர்க்கவும். உப்பு சேர்க்கவும். பச்சை நிற ஃபுட் கலரில் சில துளிகள் தண்ணீர் விட்டுச் சேர்க்கவும். சிட்ரிக் அமிலத்தில் சில துளிகள் தண்ணீர் விட்டுக் கலக்கிச் சேர்க்கவும். புதினா இலைகளைச் சேர்த்து, சூடாக இருக்கும் போதே மூடி வைக்கவும். 1 மணி நேரம் கழித்து இலைகளை எடுத்துவிட்டு பாட்டிலில் நிரப்பி வைக்கவும். தேவைப்படும் போது, மூன்றில் 1 பங்கு சிரப்பில், இரண்டில் 1 பங்கு  குளிர்ந்த தண்ணீர் விட்டுக் கலக்கிப் பரிமாறவும்