Author Topic: மட்டன் சமோசா  (Read 595 times)

Offline kanmani

மட்டன் சமோசா
« on: July 03, 2013, 02:11:15 PM »
என்னென்ன தேவை?

கொத்துக்கறி- 250 கிராம்
மைதா மாவு-300கிராம்
பெரிய வெங்காயம்- 2
பச்சை மிளகாய்- 8
கிராம்பு-3
பட்டை -சிறு துண்டு
சோம்பு -1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை -சிறிதளவு
கொத்துமல்லி தழை - 1 கட்டு
உப்பு - தேவையான அளவு

எப்படி செய்வது?

கொத்துக்கறியை மஞ்சள் தூள் போட்டு வேகவைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி தழை, கறிவேப்பிலை, ஆகியவற்றை பொடியாக  நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி  கிராம்பு, பட்டை, சோம்பு, போட்டு பிறகு நறுக்கியவற்றை போட்டு வதக்கவும். பிறகு  வேகவைத்த கறியைச் சேர்த்து வதக்கவும்.  மைதாவை தேவையான அளவு உப்பும் தண்ணீரும் சேர்த்து பூரிக்கும் பிசைவது போல் பிசைந்து  கொள்ளவும். கறிக்கலவையை சிறு உருண்டைகளாகச் செய்து பூரிபோல் தேய்த்து அதன் நடுவில் கலவையை வைத்து இரண்டாக மடித்து விடவும்.  வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சமோசாக்களை போட்டு சிவக்க வறுத்து எடுக்கவும்.