Author Topic: காதலின் கீதம்..  (Read 1073 times)

Offline PiNkY

காதலின் கீதம்..
« on: May 17, 2013, 02:27:45 PM »
எங்கோ பிறந்தோம்..!
ஒரு நாள் சந்தித்தோம்..
மறு நாள் காதல் வயப்பட்டோம்..

நாட்கள்  நிமிடங்களாய் ..
சுகமாய் நகர்ந்தன..
காதல் பூக்களை நான் அள்ளித்தர..
அதை அழகாய் சூடிக்கொண்டவளே..
ஏனோ..? இன்று ..
அதை உன் பூ பாதங்களில் நசுக்கியதேனோ..?


கொதிக்கும் என் இதயத்தை..
குளிர செய்யும் உன் வார்த்தைகள்..
ஏனோ..?
இன்று குளிர்ந்திருந்த என் இதயத்தை..
கொதிக்க செய்ததேனோ.?

என் காதலை விலையற்றதாய் எண்ணிய நீ..
ஏனோ..?
இன்று அதை விலை பேசியதேனோ.?

என்னுள் பொங்கி எழுந்த..
வலியும் வேதனையும் தாளாத என் கரங்கள்..
உன் கன்னத்தை பதம் பார்க்க..
உன்னிலும் அதிகமாய் நான் துடித்தேனடி..!

ஏனோ..?
இன்று என் கரங்களுக்கு ..
உன் திருமண பத்திரிகையை பரிசளித்ததேனோ..?

உன் பணக்கார கணவனுடன்..
நீ வாழ்வதை தூரமாய் நின்று..
ரசித்து  மகிழ்ந்து வாழ்த்தினேன்..

ஏனோ..?
இன்று என் காதலை உணர்ந்து..
என் காலடியில்..
உன் வாழ்கையை கண்ணீரில் கரைப்பதேனோ..?

உன் பணக்கார கணவன்..
புனிதமான உன் தாலிக்கு விலை பேச..
அதை ஏற்றுக்கொள்ள முடியாத உன் மனம்..
என் பாதங்களில்..
இன்று என் காதலை உணர்ந்து கதறுகிறது..

ஏனோ..?
கதறும் உன் மனதை தேற்ற..
என் கரங்கள் நீட்ட..
அது இயலாமல்.. போனதேனோ..?

இமைகள் விரித்து பார்த்தேன்..
புரிந்தது அபோது..
நீ என் காலடியில்..
உன் வாழ்கையை கண்ணீரில் கரைக்கவில்லை..
அது என் கல்லறையின் காலடி என்று..!!!

அடுத்த ஜென்மத்தில் ஆவது..
என் காதலுக்கு விலை பேசி..
அதன் தவறை தாமதமாய் உணராமல்..
முன்னமே என் காதலை உணர்ந்து..
உன் வாழ்கையை என் காதலில் கரைப்பாயா.?
இப்போது போல் என் கல்லறையில் கரைக்காமல்..!

அடி..! என் ப்ரியசகி..!
உன்னை இன்றும்.. என்றும்.. என் மனம் நேசிக்கும்..
உன்னை என் சுவாசமாய் நேசிக்கிறேன்..
உயிராய் சுவாசிக்கிறேன்..
ஜென்ம ஜென்மமாய் யாசிக்கிறேன்..!!

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
Re: காதலின் கீதம்..
« Reply #1 on: May 17, 2013, 08:14:21 PM »
pinky romba valiyoda iruku... original feelings aah..........

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline PiNkY

Re: காதலின் கீதம்..
« Reply #2 on: May 26, 2013, 07:56:27 AM »
அப்படி எல்லாம் இல்லை மத்தவங்க பீலின்க்ச உணர்ந்து  எழுதுறதுதான் ...

Offline Global Angel

Re: காதலின் கீதம்..
« Reply #3 on: June 26, 2013, 01:51:11 AM »
தெரிந்தே பல தவறுகள் , தெரியாமல் சில தவறுகள் .. காலம்தான் தண்டனை அழகான கவிதை பிங்கி
                    

Offline PiNkY

Re: காதலின் கீதம்..
« Reply #4 on: July 03, 2013, 03:17:09 PM »
thank u 4ur comments angel..

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: காதலின் கீதம்..
« Reply #5 on: July 08, 2013, 03:42:56 AM »
நல்லா இருக்கு பின்கி ஒருவரின் வலியை அப்படியே சொல்லிருக்க  படிக்கும் போதே கண்ணுல தண்ணி  வந்துடுச்சி
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....