Author Topic: சிக்கன் பிரியாணி  (Read 834 times)

Offline kanmani

சிக்கன் பிரியாணி
« on: July 02, 2013, 08:52:28 AM »

    பாஸ்மதி அரிசி - 3 டம்ளர்
    சிக்கன் - முக்கால் கிலோ
    வெங்காயம் - 3
    தக்காளி - 3
    இஞ்சி - ஒரு பெரிய துண்டு
    முழு பூண்டு - 5
    பச்சை மிளகாய் - 5
    தனி மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    பிரியாணி தூள் - ஒரு தேக்கரண்டி
    தயிர் - ஒரு கப்
    மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
    பட்டை, அன்னாசிப் பூ, பிரிஞ்சி இலை, கிராம்பு, ஏலக்காய் - பொடிக்க
    எலுமிச்சை பழம் - ஒன்று
    சிக்கன் 65 பவுடர் - ஒரு தேக்கரண்டி
    முட்டை - 4
    புதினா - அரைக் கட்டு
    மஞ்சள் கலர் பவுடர், கேசரி பவுடர் - சிறிது
    எண்ணெய்
    உப்பு

 

எலும்பில்லாத சிக்கனை தனியாக எடுத்து 65 பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும். மீதியுள்ள சிக்கனுடன் தயிர், மஞ்சள் தூள் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரிசியைக் களைந்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். புதினாவை சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் வாணலியில் வறுத்து பொடிக்கவும்.
   

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வறுத்து பொடித்தவற்றைச் சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள புதினாவை சேர்க்கவும்.
   

பச்சை வாசனை போனதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
   

பிறகு தயிரில் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து பிரட்டி, இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.
   

அதனுடன் பிரியாணி தூள், தனி மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
   

வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் களைந்த அரிசியை சேர்க்கவும். அரிசி சேர்த்து குக்கர் விசிலை எடுத்துவிட்டு மூடி, முழு தீயில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
   

5 நிமிடங்கள் கழித்து திறந்து ஒரு முறை மெதுவாக அடியோடு கிளறி விசில் போட்டு மூடி 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைக்கவும்.
   

65 பொடி கலந்த சிக்கனை எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ளவும். முட்டையை பொடிமாஸ் செய்து கொள்ளவும்.
   

10 நிமிடங்கள் கழித்து குக்கரை இறக்கி, ஸ்டீம் குறைந்ததும் குக்கரை திறந்து பிரியாணியை தட்டில் கொட்டி ஆறவிடவும். அதில் பொரித்த சிக்கன், முட்டை பொடிமாஸ் சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்துவிடவும். சிறிது தண்ணீரில் கேசரி பவுடர், மஞ்சள் கலர் பவுடர் சேர்த்து கரைத்து ஊற்றி கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
   

சுவையான சிக்கன் பிரியாணி ரெடி. பரிமாறும் போது நன்கு ஊறி மேலும் சுவையாக இருக்கும்.

இதை குஸ்கா முறையில் செய்து, அனைத்து சிக்கனையும் 65 ஆக பொரித்து சேர்க்கலாம். குஸ்கா செய்ய சிக்கனை தவிர்த்து, சிக்கன் வேக வைத்த நீரை மட்டும் சேர்த்து இதே முறையில் செய்யலாம்.
« Last Edit: July 02, 2013, 09:28:58 AM by kanmani »