என்னென்ன தேவை?
வெள்ளைக்கொண்டைக்கடலை-200கிராம்
உருளைக்கிழங்கு-2 பெரியது
தக்காளி-3
வெங்காயம்-100கிராம்
இஞ்சி 1 பெரிய துண்டு
பச்சை மிளகாய்-4
கரம் மசாலா- 2 தேக்கரண்டி
கொத்துமல்லித்தழை-1/2 கட்டு
மஞ்சள்தூள்-1/2 தேக்கரண்டி
எண்ணெய்+நெய்- 2 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு- ருசிக்கேற்ப
உப்பு- தேவையான அளவு
எப்படி செய்வது?
வெள்ளைக்கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்துக்கொள்ள வேண்டும். ஊறிய கடலையை கழுவி குக்கரில் நன்றாக மெத்தென்று வரும் வரை வேகவைக்கவும். உருளைக்கிழங்கையும் வேகவைத்து தோல் நீக்கி சிறிய துண்டுகளாக செய்து கொள்ளவும். நறுக்கிய வெங்காயம் தக்காளி ஒன்று கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய் இவற்றுடன் ஊறிய கடலை சிறிதளவு போட்டு தண்ணீர் தெளித்து அரைத்துக்கொள்ளவும். விழுதில் கொஞ்சம் உப்பு சேர்க்கவும். வேக வைத்த கடலையிலும் உப்பு சேர்க்கவும். வாணலியில் எண்ணெயும் நெயும் கலந்து வைத்து சூடு நன்றாக வந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு நன்றாக வதக்கவும். தக்காளி வெந்ததும் அரைத்த விழுதை போட்டுக் கிளறவும். நல்ல மணம் வரும் வரையில் வதக்க வேண்டும். கரம் மசாலாப் பொடியையும் சேர்த்து வதக்கி கொள்ளவும். அல்வா பதத்தில் இருக்கும் விழுதில் வேகவைத்த கடலையை போடவும். தண்ணீர் சிறிதளவு விட்டுக்கொதிக்க வைக்கவும். தொக்கு பதத்தில் இருக்க வேண்டும். மஞ்சள்தூள், உருளைக்கிழங்கு துண்டுகளைப் போடவும் நன்றாக கொதித்ததும் கீழே இறக்கி வைத்து எலுமிச்சை சாறு விடவும்.
குறிப்பு : அதிக காரம் தேவையானால் காரப்பொடி சேர்த்துக்கொதிக்க வைத்துக்கொள்ளவும். காலையில் கடலையை ஊற போட்டால் சிறிதளவு சமையல் சோடா சேர்த்து வேகவைத்தால் மெத்தென்று வெந்து விடும்.. அலங்கரிக்க பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி, எலுமிச்சை துண்டங்கள் தட்டில் வைத்து சிறு கரண்டியால் எடுத்து சாப்பிடலாம்.