தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் - 4
முட்டை - 2
சீஸ் - 2 கட்டிகள் (துருவியது)
பட்டை தூள் - 1/2 டீஸ்பூன்
பெப்பர் தூள் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
ப்ரஷ் க்ரீம் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பிரட்டை இரண்டு பிரட் துண்டுகள் போன்று வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அந்த இரண்டு பிரட் துண்டுகளுக்கும் இடையில், துருவிய சீஸை வைத்துக் கொள்ள வேண்டும்.
(அளவுக்கு அதிகமாக சீஸை துணித்து வைக்கக்கூடாது.)
இதேப் போன்று அனைத்து பிரட் துண்டுகளையும் வெட்டி, சீஸ் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பௌலில் முட்டை, உப்பு, பட்டை தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து தோசைக்கல்/பேனை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை தடவி உருக வைக்க வேண்டும்.
வெண்ணெயானது உருகியதும், ஒவ்வொரு பிரட் துண்டுகளாக முட்டை கலவையில் நனைத்து, தோசைக்கல்லில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
பின்பு அதன் மேல் ப்ரஷ் க்ரீம் தடவி பரிமாறினால், சுவையான சீஸ் பிரெஞ்சு டோஸ்ட் ரெடி!!!