புகை பிடித்தால்
நுரையீரல் கெடும்
புகை பிடித்தால்
சயரோகம் வரும்
புகை பிடித்தல்
உடலுக்கு தீங்கு என
டீவிகளில், பத்திரிகைகளில்
சினிமாக்களில் வரும்
விளம்பரத்தை பார்த்துக் கொண்டே
சிகரட்டை ஊதித் தள்ளுவதை போன்றே
மனதைக் கெடுக்கும்
காதலும் ஆகும்
காதல் சிருகச்சிருக மனதை
கொல்லும் நஞ்சு
காதல் மனிதனை
மனநோயாளியாக்கும் ஸ்டீரியா
காதல் உலகத்தையே
மறக்கச் செய்யும் அம்னீசியா
இதை கேட்டும் அறிந்தும்
அனுபவத்தால் உணர்ந்தும்
காதல் வசப்படுவதும்
புகை பிடிப்பதும் ஒன்றே
காதல் துன்பத்திலும் இன்பமாம்
உண்மை தான்
உடம்பில் சொறி வியாதி வந்தவனுக்கு
சொறியும் போது இன்பமாம்
இந்த காதலும் அப்படித்தான்
சொறிந்து சொறிந்து
சீல் பிடிப்பது போல
துன்பத்தில் அமிழ்ந்து அமிழ்ந்து
மூச்சடங்கிப் போகிறார்கள்
காதலுக்காக உயிரையும் விடுவார்களாம்
நாம் உணவு உண்பது
உயிர் வாழத்தான்
அந்த உணவே உயிருக்கு கெடுதலென்றால்
உண்போமா?
காதலும் அப்படித்தான்
உயிர் வாழத்தான் காதலே அல்லாமல்
உயிரை அழிப்பதற்கல்ல
இந்தக் காதலால்
அமைந்த சாம்ராட்சியங்களை விட
அழிந்த சாம்ராட்சியங்களே அதிகம்
இந்தக் காதல் நிறைவேறி
சரித்திரம் படைத்தவர்களை விட
நிறைவேறாமல் சரித்திரம் படைத்தவர்களே அதிகம்
காதல் என்றும் உலகில்
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது
காதலர்கள் தான்
காலாவதியாகுகிறார்கள்
காதல்ர்கள் இல்லாமல் வாழும் காதல்
பூ இல்லமல்
அதில் வீசும் மணத்துக்கு ஒப்பானது