Author Topic: ஜஃப்ரானி புலாவ்  (Read 494 times)

Offline kanmani

ஜஃப்ரானி புலாவ்
« on: June 21, 2013, 12:07:06 PM »
தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 2 கப்
பால் - 1/4 கப்
குங்குமப்பூ - 1 டீஸ்பூன்
முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பாதாம் - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உலர் திராட்சை - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பாலில் குங்குமப்பூவை சேர்த்து, 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், அரிசியைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 5-6 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் குங்குமப்பூ பால், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 15 நிமிடம் மூடி வேக வைக்க வேண்டும்.

அதே சமயத்தில் மற்றொரு அடுப்பில் சிறிய வாணலியை வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

 பின் சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு, சர்க்கரையானது கரைந்ததும், முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை சேர்த்து வதக்கி இறக்கி விட வேண்டும்.

சாதமானது வெந்ததும், அதில் ஏலக்காய் பொடி தூவி கிளறி, வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கி விட வேண்டும்.

இப்போது வித்தியாசமான ஜஃப்ரானி புலாவ் ரெடி!!! இதன் மேல் புதினாவை தூவி பரிமாற வேண்டும்.