என்னென்ன தேவை?
மீன்- 500 கிராம்.
முட்டை-2
பெரிய வெங்காயம்- 2
பச்சை மிளகாய்-8
இஞ்சி-1 துண்டு
பூண்டு- 5 பல்
எலுமிச்சை-1
மஞ்சள்தூள்-1டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு-தேவையான அளவு
கொத்துமல்லி-1 கட்டு
ரொட்டித்தூள்-தேவையான அளவு
எப்படி செய்வது?
மீனை மஞ்சள் தூள் உப்பு சேர்த்து வேகவைக்கவும். தோலை உரித்து முள்ளை எடுத்து விட்டு ஊதிர்த்துக்கொள்ளவும். வெங்காயம் பூண்டு இஞ்சி, மிளகாய், கொத்துமல்லியை நறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கியவைகளை சேர்த்து நன்றாக வதக்கி உதிர்த்த மீனுடன் சேர்க்கவும். முட்டையை அடித்துக்கொள்ளவும். மீன் கலவையில் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் வைத்த வட்டமாகச் செய்து அடித்த முட்டையில் நனைத்து ரொட்டித்துண்டுகளில் புரட்டி எடுக்கவும். வாணலியில் எண்ணெய் காயவைத்து கட்லெட்டைப் போட்டு பொரித்து எடுக்கவும்.