Author Topic: சாக்லெட்டி மோச்சாகினோ  (Read 558 times)

Offline kanmani

என்னென்ன தேவை?

சூடான பால் - 1 கப்,
இன்ஸ் டன்ட் காபி தூள் - 3 டீஸ்பூன்,
சாக்லெட் சிரப் - 2 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - தேவைக்கேற்ப,
நன்கு அடித்த கிரீம் - விருப்பப்பட்டால்.
எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் இன்ஸ்டன்ட் காபி தூள், சர்க்கரை, பால் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பை அணைத்து சாக்லெட் சிரப் சேர்த்து நன்கு கலக்கவும். மேலே கிரீம் கொண்டு அலங்கரித்து சூடாகப் பரிமாறவும்.