என்னென்ன தேவை?
பெரிய வெங்காயம்- 11/4 கிலோ
தக்காளி-2
காய்ந்த மிளகாய்-8
சோம்பு-1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
கசகசா-1 தேக்கரண்டி
தேங்காய் துருவல்-4 தேக்கரண்டி
சோம்பு-1 தேக்கரண்டி
எண்ணெய்-4தேக்கரண்டி
உப்பு-தேவையான அளவு
எப்படிச் செய்வது?
காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், கசகசா, தேங்காய்த்துருவல், எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, தாளித்த வெங்காயம், தக்காளியைப் போடவும். பிறகு அரைத்த மசாலாவைப் போட்டு வதக்கி 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு போடவும். வெந்ததும் இறக்கி பறிமாறவும்.