Author Topic: ~ நாவில் நீர் ஊற வைக்கும் மாம்பழங்கள் ~  (Read 894 times)

Online MysteRy

அல்போன்சா மாம்பழம் (Alphonso)
அல்போன்சா மாம்பழம் மிகவும் விலை அதிகமானது. இதன் விலைக்கேற்ப இதன் சுவையும் சூப்பராக இருக்கும்.


Online MysteRy

பாதாமி மாம்பழம் (Badami)
இந்த வகையான இந்திய மாம்பழம் மிகவும் இனிப்புடன், சதைப்பற்று மிக்கதாக இருக்கும். எனவே இந்த மாம்பழத்தை அப்படியே அல்லது ஜூஸ் போட்டு குடிக்கலாம்.


Online MysteRy

பங்கனப்பள்ளி (Baiganpalli)
ஆந்திராவில் மிகவும் பிரபலமானது தான் பங்கனப்பள்ளி. இது மிகவும் அருமையான சுவையுடையது.


Online MysteRy

தசேரி மாம்பழம் (Dussehri)
உத்தர பிரதேசத்தில் விளையக்கூடிய மாம்பழம் தான் தசேரி. இதுவும் அதிக இனிப்புச் சுவையுடைய மாம்பழங்களுள் ஒன்று.


Online MysteRy

கேசர் மாம்பழம் (Kesar)
கேசர் மாம்பழம் மிகவும் சுவையுடனும், பச்சையாகவும் சாப்பிடக்கூடியது. பொதுவாக இந்த மாம்பழம் அகமதாபாத்திலிருந்து வந்தது.


Online MysteRy

மல்கோவா மாம்பழம் (Malgova)
சேலத்து மாம்பழமான மல்கோவா மாம்பழம் மிகவும் தித்திப்புடன் இருக்கும். இந்த மாம்பழம் ஊறுகாய் மற்றும் மில்க் ஷேக் போடுவதற்கு மிகவும் ஏற்றது.


Online MysteRy

மல்லிகா மாம்பழம் (Mallika)
இந்தியாவில் கிடைக்கும் இந்த மாம்பழம், நீலம் மற்றும் தசேரி மாம்பழத்தின் கலப்பினமாகும்.


Online MysteRy

ராஸ்புரி மாம்பழம் (Raspuri)
ராஸ்புரி மாம்பழங்களானது நீள்வட்ட வடிவில், சிவப்பு கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு மாம்பழம்.


Online MysteRy

செந்தூரன் (Sindura)
இந்த செந்தூரன் மாம்பழமானது மிகவும் இனிப்பான சுவையுடன், அதிக சதைப்பற்றுடன் இருக்கும்.