என்னென்ன தேவை?
அவல்-2கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு-2,
பச்சைமிளகாய்-2
பெரியவெங்காயம்-1
இஞ்சி-1 சிறிய துண்டு
மிளகாய்த்தூள்-அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு-2டீஸ்பூன்
கொத்துமல்லித்தழை-சிறிதளவு
உப்பு, எண்ணெய்-தேவையான அளவு
எப்படி செய்வது?
தண்ணீரில் அவலை போட்டு லேசாக அலசி தண்ணீரை வடித்து 10 நிமிடம் ஊறவைக்கவும். உருளைக்கிழங்கின் தோலை நீக்கி மசித்து அவலுடன் சேர்க்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம் கொத்துமல்லித்தழை நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய் எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து அழுத்தி பிசையவும். இதை சிறு உருண்டைகளாக உருட்டி வடைகளாகத் தட்டவும் நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுக்கவும். வித்தியாசமான சுவை கொண்ட வடை இது.