Author Topic: கடப்பா  (Read 563 times)

Offline kanmani

கடப்பா
« on: June 14, 2013, 10:44:41 AM »

    பெரிய வெங்காயம் - ஒன்று
    சின்ன வெங்காயம் - 20
    பட்டாணி - 50 கிராம்
    உருளைக்கிழங்கு - 2
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    தேங்காய் துருவல் - அரை மூடி
    பாசிப்பருப்பு - 50 கிராம்
    கசகசா - ஒரு தேக்கரண்டி
    ஏலக்காய் - 2
    பட்டை - 2 துண்டு
    கிராம்பு - ஒன்று
    இஞ்சி - அரை அங்குலத் துண்டு
    பூண்டு - ஒன்று
    சோம்பு - ஒரு தேக்கரண்டி
    பிரிஞ்சி இலை - பாதி
    மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி+ஒரு தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 2 கொத்து
    கொத்தமல்லித் தழை - 2 கொத்து
    உப்பு - அரை தேக்கரண்டி + முக்கால் தேக்கரண்டி
    எலுமிச்சை - அரை மூடி

 
   

உருளைக்கிழங்கு மற்றும் இஞ்சியை தோல் சீவிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
   

குக்கரில் உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், அரை தேக்கரண்டி உப்பு, பாசிப்பருப்பு, பச்சை மிளகாய், பட்டாணி போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடி வெயிட் போட்டு 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
   

மிக்ஸியில் தேங்காய், இஞ்சி, பூண்டு, கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, கசகசா போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
   

வாணலியில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 தேக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு மற்றும் பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்.
   

சோம்பு பொரிந்ததும் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
   

வெங்காயம் வதங்கியதும் தக்காளியைப் போட்டு வதக்கி, பிறகு அரைத்த விழுதை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி லேசாக கொதிக்கவிடவும்.
   

கொதி வந்ததும் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு கிளறிவிடவும்.
   

அதனுடன் வேக வைத்த உருளைக்கிழங்கு, பாசிப்பருப்பு கலவையை மசித்துவிட்டு சேர்க்கவும்.
   

பிறகு நன்கு கிளறிவிட்டு மிதமான தீயில் வைத்து மூடிவிடவும். 4 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். கடைசியாக எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு கிளறிவிடவும்.
   

சூடான கடப்பா தயார். இட்லி, வெஜ் இட்லி மற்றும் தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.