Author Topic: வெந்தயக் கீரை சப்பாத்தி  (Read 465 times)

Offline kanmani

தேவையான பொருட்கள்:

வெந்தயக் கீரை - 1 கப் (நறுக்கியது)
கோதுமை மாவு - 2 கப்
கடலை மாவு - 1 கப்
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
ஓமம் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கோதுமை மாவு, கடலை மாவு, உப்பு, வெந்தயக் கீரை, பச்சை மிளகாய், வெங்காயம், ஓமம், மிளகாய் தூள் மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளைப் போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான வெந்தயக் கீரை சப்பாத்தி ரெடி!!!

இதனை சாம்பார் அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்