தேவையான பொருட்கள்:
மைதா - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
ஓமம் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, ஓமம், மிளகு தூள் மற்றும் சீரகம் போட்டு, தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை சப்பாத்தி போல் தேய்த்து, டயமண்ட் வடிவில் வெட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டில் வைத்துள்ள டயமண்ட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது காரமான டயமண்ட் பிஸ்கட் ரெடி!!!