புழுங்கல் அரிசி - ஒரு கப்
எண்ணெய் - ஒரு கப்
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் துருவல் - அரை கப்
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பின் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து சிவக்கவிடவும்.
சிவந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து வறுத்தெடுக்கவும்.
வறுத்தவற்றை மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு அதில் கலந்த மாவைச் சேர்த்து, கைவிடாமல் கிளறி இறக்கவும்.
இறக்கிய பின் கெட்டியான மாவை, சூட்டுடன் உருண்டைகளாக பிடித்து, 10 நிமிடங்கள் ஆவியில் வேகவிட்டு இறக்கவும்.
சுவையான உப்பு உருண்டை ரெடி.