முட்டைகோஸ் - கால் பாகம்
கேரட் - ஒன்று
மிளகாய் வற்றல் - ஒன்று
சின்ன வெங்காயம் - 8
கல் உப்பு - அரை தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
முட்டைகோஸ் மற்றும் கேரட்டை துருவிக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் இரண்டாக கிள்ளிய மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். பின் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் துருவி வைத்திருக்கும் முட்டைகோஸ், கேரட்டை போட்டு ஒரு கையளவு தண்ணீர் தெளித்து கிளறிவிடவும்.
பின் உப்பு, கறிவேப்பிலை போட்டு கிளறவும். இடையிடையே கிளறிவிட்டு 5 நிமிடங்கள் வேகவிடவும்.
முட்டைகோஸ் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
முட்டைகோஸ் கேரட் துவட்டல் தயார்.