Author Topic: பட்டாணி புலாவ்  (Read 512 times)

Offline kanmani

பட்டாணி புலாவ்
« on: May 25, 2013, 12:37:42 AM »

    பட்டாணி - அரை கப்
    பச்சரிசி - ஒரு கப்
    குடை மிளகாய் - பாதி
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - ஒரு அங்குல துண்டு
    கொத்தமல்லித் தழை - 5 கொத்து
    நெய் - அரை மேசைக்கரண்டி
    உப்பு - ஒன்றரை தேக்கரண்டி

 

குடை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரிசியை களைந்து, தண்ணீரை வடித்து விட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
   

கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
   

வாணலியில் நெய் ஊற்றி கொத்தமல்லி விழுதை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
   

பிறகு குடை மிளகாயை போட்டு வதக்கி விட்டு, பட்டாணி மற்றும் உப்பு போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.
   

ஒரு பாத்திரத்தில் ஊறிய அரிசியுடன் வதக்கிய கலவையை போட்டு 2 கப் தண்ணீர் ஊற்றவும். அந்த பாத்திரத்தை குக்கரில் வைக்கவும்.
   

குக்கரை மூடி வெய்ட் போட்டு, 15 நிமிடங்கள் வேக வைத்து, வெந்ததும் இறக்கிவிடவும். பின் 5 நிமிடங்கள் கழித்து திறந்து சூடாக பரிமாறவும்.
   

சுவையான பட்டாணி புலாவ் தயார்.